இந்தியா நேற்று பங்களாதேஷ் அணியுடன் த்ரில் வெற்றி பெற்றது.இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிவாய்ப்பை கிட்டதட்ட உறுதி செய்துள்ளது.ஆனால் தற்போது இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணி சற்று நெருக்கடியை தருவதாக தெரிகின்றது.
இந்திய அணி கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த அணியுடன் வென்றால், அரையிறுதி உறுதியாகிவிடும். ஒருவேளை தோற்றால், பாகிஸ்தான் அணி அடுத்து தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் அணிகளுக்கு எதிராக வென்றால், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 6 புள்ளிகளுடன் இருக்கும்.
இதனால், நெட் ரன் ரேட்தான் யாருக்கு அரையிறுதி என்பதை உறுதி செய்யும்.இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவை விட அதிக ரன் ரேட் இருப்பதால் பாகிஸ்தான் அணிக்கு அது சாதகமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது