Skygain News

பல வசதிகளுடன் சியோமியின் புதிய ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம்…விலை எவ்வளவு தெரியுமா..?

சியோமி நிறுவனம் மிஜியா ஸ்மார்ட் கண்ணாடி மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் கண்ணாடி இண்டெலிஜண்ட் இமேஜ் மற்றும் ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பயனர்களுக்கு கற்பனை திறனை வெளிப்படுத்த செய்கிறது.

இது ஆக்மெண்டெட் ரியாலிட்டி கிளாஸ் மற்றும் வழக்கமான கண்ணாடி கலந்த ஒற்றை சாதனம் ஆகும். இதில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. தோற்றத்தின் படி இந்த ஸ்மார்ட் கிளாஸ் அன்றாட பயன்பாடுக்கு ஏற்றதாக காட்சியளிக்கவில்லை.

கண்ணாடியின் இரண்டு புறங்களிலும் ஏ.ஆர். ஆப்டிக்கல் டிஸ்ப்ளே மற்றும் கேமரா மாட்யுல் ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளன. லென்ஸ் மற்றும் ஃபிரேம்கள் இந்த கண்ணாடியின் முழு பயன்பாடுகளை அனுபவிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட் கிளாஸ் மொத்த எடை 100 கிராம் ஆகும்.

சியோமி மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் அம்சங்கள்:

சோனி மைக்ரோ OLED சிலிகான் சார்ந்த டிஸ்ப்ளே

3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்

ஆண்டி-புளூ லைட் சான்று

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

3ஜிபி ரேம் – 32ஜிபி மெமரி

50MP பிரைமரி கேமரா

8MP டெலிபோட்டோ கேமரா

ஏ.ஆர். மூலம் ரியல்-டைம் மொழி பெயர்ப்பு வசதி

ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைபை, இண்டிபென்டெண்ட் ஐஎஸ்பி

1020 எம்ஏஹெச் பேட்டரி

10 வாட் சார்ஜிங்

30 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ்

10 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக பதிவு செய்யும் வசதி

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய சியோமி மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் விலை CNY 2499 இந்திய மதிப்பில் ரூ. 29 ஆயிரத்து 275 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் கிரவுட்-ஃபண்டிங் விற்பனை நாளை (ஆகஸ்ட் 03) துவங்குகிறது. அதன் பின்னர் இந்த ஸ்மார்ட் கிளாஸ் CNY 2699 இந்திய மதிப்பில் ரூ. 31 ஆயிரத்து 615 விலையில் விற்பனை செய்யப்படும்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More