இந்தியா முழுவதும் 34 பொதுத்துறை வங்கிகள் இயங்கி வருகின்ற நிலையில் இதில் 12 அரசு வங்கிகள் மற்றும் 22 தனியார் வங்கிகள் அடங்கும். தற்போது அனைத்து வங்கிகளுக்கும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படு வருகிறது. இதேபோல் அரசு விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், விரைவில் இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிடலாம் என கூறப்படுகிறது.
