தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் பாகுபலி படப்புகழ் பிரபாஸ் 42 வயதாகியும் இன்னும் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்.
எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டிக்கு நல்ல பொருத்தம் இருந்தது. அந்த படத்தில் நடித்த போது இருவரும் காதலித்ததாக தகவல் பரவியது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் சாஹோ படத்திலும் அனுஷ்காவின் பெயரை பிரபாஸ் சிபாரிசு செய்திருந்தார்.
ஆனால், அனுஷ்கா, அப்போது குண்டாக இருந்ததால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவி போனது.

இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தில் ராமராகவும், சீதாவாகவும் நடித்துள்ள பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோனும் காதலிப்பதாகவும் இருவரும் அவ்வப்போது டேட்டிங் சென்று வருவதாகவும் தகவல் பரவி வரும் நிலையில், பிரபல வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினரும் திரைப்பட விமர்சகருமான உமர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்த வாரம் பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோனுக்கு மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது என் ட்விட் செய்துள்ளார்.
இணையத்தில் இந்த செய்தி டிரெண்டாகி வருகிறது
