நித்தியானந்தா 8 சாதனைகள் படைத்துள்ளதாகவும் அந்த சாதனைகள் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றுள்ளதாகவும் கைலாசா அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பிடதியில் ஆசிரமம் அமைத்து பிரபலமாக இருந்த நித்தியானந்தா பாலியல், மோசடி போன்ற வழக்குகளில் சிக்கியதால் சீடர்களுடன் தலைமறைவானார். தனக்கென கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருவதாக அதன் பின்னர் அவர் தொடர்ந்து வீடியோ மூலம் அறிவித்து வருகிறார். அந்த நாடு எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது? என்பதற்கான வீடியோ, புகைப்படங்களோ இதுவரைக்கும் வெளியாகவில்லை .

ஆனாலும் கைலாசா என்கிற தனி நாட்டுக்கான அனைத்து விஷயங்களையும் செய்து வருவதாக நித்யானந்தா அறிவித்து வருகிறார். இந்த நிலையில் நித்தியானந்தா 8 சாதனைகள் படைத்துள்ளதாகவும் அந்த எட்டு சாதனைகளும் ஆசிய புக் ஆப் ரெக்க்கார்ட்ஸ்சால் ஏற்கப்பட்டுள்ளதாகவும் கைலாசா தனது வலைத்தள பக்கத்தில் தகவல் பகிர்ந்து இருக்கிறது.

ஒரு ஆசிரியரால் வெளியிடப்பட்ட அதிகபட்ச புத்தகங்கள் – 1123 புத்தகங்கள்
ஒரு தனிநபரால் வழங்கப்பட்ட பொது பேச்சின் அதிகபட்ச மணி நேரம் – 7407 தலைப்புகளில் 289,928 மணி நேரம்
ஒரு மணி நேரத்தில் உச்சரிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்லோகங்கள் – 999 ஸ்லோகங்கள்
ருத்ரம் மந்திரத்தை உச்சரிக்க நீண்ட காலம் – 30 Hour’s
உயிருடன் இருக்கும் ஒருவருக்கு அதிகபட்ச பாடல்கள் சமர்ப்பணம் – 530 பாடல்கள்
ஒரு குழுவால் செய்யப்படும் அதிகபட்ச பாரம்பரிய ஆசனங்கள் – 108 நிமிடங்களில் 508 ஆசனங்கள்
ஒரு ஆன்மீக நிறுவனத்தால் கொண்டாடப்படும் அதிகபட்ச பிரம்மோற்சவம் – 13 பிரம்மோற்சவம்
ஒரு குழுவால் பத்மஸனா யோகா போஸ் வைக்க நீண்ட காலம் – 3 மணி நேரம் 10 நிமிடங்கள்
ஆகிய 8ம் நித்தியானந்தாவின் சாதனைகள் என்றும், இவை ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்பெற்றுள்ளது என்றும் கைலாசா குறிப்பிட்டுள்ளது.