சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. ஜெயமோகனின் எழுத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் வெளியான இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது.
மாநாடு படத்தை தொடர்ந்து சிம்புவிற்கு இப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இப்படத்தின் நாயகன் சிம்புவிற்கு காஸ்டலியான கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதையடுத்து இயக்குனர் கௌதம் மேனனுக்கு பைக் ஒன்றை பரிசளித்தார்.
இந்நிலையில் இப்படத்தை ரசிகர்கள் இடையில் கொண்டு சேர்த்தத்தில் மிகப்பெரிய பங்கு கூல் சுரேஷிற்கு உண்டு. அவர் தான் வாரம் தோறும் தியேட்டரில் ‘வெந்து தணிந்ததது காடு.. இந்த படத்திற்கு வணக்கத்த போடு’ என எல்லா youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார்.
And @IshariKGanesh took this tweet seriously and gifted an iPhone to the best and biggest fan boy & promoter of #SilambarasanTR and #VTK 😍
— KARTHIK DP (@dp_karthik) September 27, 2022
Happy for #CoolSuresh 🤙🏻📲 https://t.co/w5obRlTEM5 pic.twitter.com/TMgwkuUDFb
வெந்து தணிந்தது காடு என்ற பெயர் பெரிய அளவில் ரீச் ஆக கூல் சுரேஷ் தான் காரணம் என சிம்புவே நன்றி கூறி இருந்தார்.இந்நிலையில் இப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்த கூல் சுரேஷிற்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விலையுர்ந்த ஐ போன் ஒன்றை பரிசாக வழங்கினார். இந்த செயலை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்