நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா இடையேயான ஒரு நாள் போட்டியில் இந்தியா வென்றது. இப்போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.அவருடன் இணைந்து ஆடிய இஷான் கிஷான் 93 ரன்களை குவித்து ஏழு ரன்கள் வித்தியாசத்தில் சதத்தை தவறவிட்டார்.
இதுகுறித்து பேசிய இஷான் கிஷன்,அணியின் வெற்றிக்கு பங்களிப்பு தந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. இது எனது சொந்த ஊர் மைதானம் என்பதால் நான் ஃபீல்டிங் செய்யும் போதே, சதமடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரினர்.
Fan interactions with local lad @ishankishan51 👏👏
— BCCI (@BCCI) October 9, 2022
P.S. – Also, Ishan delivers a special fan note to @imShard ☺️👌 #TeamIndia | #INDvSA pic.twitter.com/6DWYVmNohh
அதற்காக மிகவும் போராடினேன். எனினும் தவறிவிட்டது. இதற்காக கவலை இல்லை, அடுத்த போட்டியில் இதை விட சிறப்பாக விளையாடலாம். மேலும் கடைசி போட்டியில் ஆட ஆவலாக இருப்பதாகவும் கூறியுள்ளார் இஷான் கிஷன்.