உலக நாடுகளுக்கு மிக பெரிய தலைவலியாய் இருந்து வந்த அல் கயிதா தலைவர் அல் ஜவாஹிரி அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று
அறிவித்தார்.
இந்நிலையில், அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறிருப்பதாவது :
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரும், அல்-கொய்தாவின் தலைவரான அய்மான் அல்-ஜவாரி இறுதியாக நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்.
அதிபர் பைடனின் தலைமைக்கு பாராட்டுக்கள். இந்த தருணத்திற்காக பல ஆண்டுகளாக உழைத்த உளவுத்துறை அதிகாரிகள் தங்களில் ஒருவருக்கு கூட சிறிய பாதிப்பும் இன்றி இதை நிகழ்த்திக் காட்டியுள்ளனர் என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் .