திமுகவில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில இளைஞர் அணி செயலாளர், துணை செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள், பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக்குழு நியமனம் உள்ளிட்டவற்றை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி திமுகவின், இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் இளைஞரணி துணை செயலாளர்களாக, எஸ்.ஜோயல், ந, ரகுபதி, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணி இணை செயலாளராக குமரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணி துணை செயலாளர்களாக பவானி ராஜேந்திரன், என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில இளைஞர் அணிச் செயலாளர் – துணைச் செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள் – பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் – ஆலோசனைக்குழு நியமனம்.
— DMK (@arivalayam) November 23, 2022
– தலைமைக் கழகம் அறிவிப்பு#DMK
1/2 pic.twitter.com/LaoN9JGAse