இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஜடேஜா CSK அணியின் ஒரு அங்கமாக இருக்கின்றார். ஆனால் கடந்த ஐ.பி.எல் சீசனில் அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக பேசப்பட்டது. இதன் காரணமாக csk அணியை விட்டு ஜடேஜா விலகப்போவதாக தகவல் வந்தது.
இந்நிலையில் டெல்லி அணி ஜடேஜாவை தங்களுக்கு Transfer செய்யும் படி கேட்டு கொண்டனர்.ஆனால் ஜடேஜாவை அனுப்பும் எண்ணம் இல்லை என்று சிஎஸ்கே கூறியுள்ளது. தற்போது எந்த வீரர்களை விடுவிக்கலாம் என்ற பட்டியலை சிஎஸ்கே தயாரித்துள்ளதாக தெரிகிறது.
அதில் கடந்த சீசனின் போது காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறிய நியூசிலாந்து வீரர் ஆடம் மிலினை சிஎஸ்கே விடுவிக்க உள்ளது.மேலும் ஜார்டான் அணியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளார்.

இந்த பட்டியலில் ஜடேஜா இல்லை. ஜடேஜா போன்ற ஒரு ஆல்ரவுண்டர் அணிக்கு மிகவும் முக்கியம் என்பதால், அவரை விடுவிக்க கூடாது என்று தோனி கண்டிப்பாக கூறியுள்ளார்.இதனால் ஜடேஜா வேறு எந்த அணிக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.