Skygain News

இந்திய அணியிலிருந்து மீண்டும் விலகிய ஜடேஜா..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இந்தியா அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இதற்கான அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.

இந்திய அணியின் ஸ்டார் வீரராக பார்க்கப்படும் ரவீந்திர ஜடேஜா, காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பையில் கூட ஆடவில்லை. அவர் இந்த வங்கதேச அணியுடனான தொடரில் தான் கம்பேக் கொடுப்பதாக அறிவிக்கப்படிருந்தது. முதன்மை ஸ்பின்னராக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால், இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை. அவர் பூரண குணமடைய அடுத்த வருடம் ஆகிவிடும் என்பதால் மாற்று வீரருக்கான தேடல் நடந்து வருகிறது.இதன் காரணமாக ஜடேஜாவின் ரசிகர்கள் சோகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.