பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஐபிஎல் ரிட்டன்சன் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜாவை தக்க வைத்து கொண்டது.
கேப்டன்சி விவகாரத்தில் ஜடேஜாவை வெளிப்படையாக செய்தியாளர் சந்திப்பில் தோனி திட்டியதே இந்த பிரச்சினைக்கு காரணம் என்றும், அதனை தாமும் மறந்துவிட்டதாக கூறி, சென்னை அணியில் தொடர ஜடேஜா ஒப்பு கொண்டார்.இந்த நிலையில், ஜடேஜாவை சிஎஸ்கே அணி தக்கவைத்து கொண்டதை அடுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் ஜடேஜா புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Everything is fine💛 #RESTART pic.twitter.com/KRrAHQJbaz
— Ravindrasinh jadeja (@imjadeja) November 15, 2022
அதில் தோனிக்கு முன் ஜடேஜா தலையை குனிந்து மரியாதை செலுத்தும் காட்சி இடம்பெற்றது. அதில், அனைத்துமே சிறப்பாக தான் உள்ளது. மீண்டும் தொடங்குகிறது என்று பதிவிட்டுள்ளார்.