csk மற்றும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஜடேஜா டெல்லி அணிக்கு மாற இருப்பதாக தகவல் வந்துள்ளது.அவரை டெல்லி கேபிடல்ஸுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு ஷர்தூல் தாகூர், அக்சர் படேல் ஆகியோரை அவர்கள் வாங்க உள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இருப்பினும் சிஎஸ்கே இது குறித்து எந்த பதிலும் கூறாமல் இருந்தது.இந்நிலையில் சிஎஸ்கே நிர்வாகி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘ட்ரேடிங் எனக் கூறி ஜடேஜாவை நாங்கள் அனுகவோ, ஆலோசிக்கவோ கிடையாது. ஜடேஜாவை ட்ரேடிங் செய்ய நாங்கள் விரும்பவில்லை. அவரும் விரும்ப

மாட்டார். அவரை அணியைவிட்டு வெளியேற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என திட்டவட்டமாக தெரிவித்தார்.எனவே இதனை வைத்து ஜடேஜா csk அணியில் தொடருவார் என நம்பியிருக்கின்றனர்