தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே போட்டியில் தமிழ்நாடு அணி ஹிமாலய சாதனை படைத்துள்ளது.நேற்று பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு – அருணாச்சலபிரதேச அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் , சாய் சுதர்ஷன் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
சாய் சுதர்ஷன் 154 ரன்கள் குவித்தார். அதேவேளை மற்றொரு புறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் 141 பந்துகளில் 277 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். முதல் தர வரிசை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை ஜெகதீசன் படைத்தார்.
இறுதியில் தமிழ்நாடு அணி 50 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 506 ரன்கள் குவித்தது. 507 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய அருணாச்சலபிரதேச அணி 71 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.இப்போட்டி முடிந்த பின் ஜெகதீசன் அளித்த பேட்டியில், நான் சிறப்பாக உணருகிறேன்.
Narayan Jagadeesan smashes his fifth consecutive century in Vijay Hazare Trophy 2022.#VijayHazareTrophy pic.twitter.com/v35sJ1Y6Ux
— CricTracker (@Cricketracker) November 21, 2022
இந்த போட்டி மட்டுமல்ல மற்ற போட்டிகளிலும் 50 ஓவர்கள் வரை விளையாடுவது தான் எனது நோக்கம். எதிரணி யார் என்பது பெரிதல்ல. எனக்கு ஒரே ஒரு செயல்பாடுதான் உள்ளது. அது என்னவென்றால் களத்தில் இருப்பது தான்’ என்றார்.