நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படம் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதால், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப்,கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.
தற்போது, ஜெயிலர் படப்பிடிப்பு தளத்துக்கு ரஜினிகாந்தின் கார் வந்தபோது அந்த காரை ரசிகர்கள் சுற்றி வளைத்துக்கொண்டனர். ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தனர்.

ஆனால், ரஜினி காருக்குள் அமர்ந்து இருந்ததால் ரசிகர்களால் செல்ஃபி எடுக்க முடியவில்லை.
அப்போது, ஒரு ரசிகர் தலைவா, நாங்கள் மதுரையிலிருந்து வந்திருக்கிறோம் என்று கூறியபோது, ரஜினி கார் கண்ணாடியை லேசாக இறக்கிய கை அசைத்தார்.
இந்த வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது