தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா.இவர் தெலுங்கில் எந் அளவுக்கு பிரபலமோ அதே அளவிற்கு தமிழிலும் பிரபலமான நடிகராக வலம் வருகின்றார். ஆனால் சமீபகாலமாக இவரது படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
கடைசியாக வெளியான இவரது லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது.இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் விஜய் தேவரகொண்டா பற்றி பேசியதுதான் தற்போது செம வைரலாகி வருகின்றது.
பிரபல நேர்காணல் நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியில் ஜான்விகபூர், சாரா அலி கான் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ஜான்விகபூரிடம் யாரை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டுள்ளது.
அந்த கேள்விக்கு, ரன்பீர் கபூர், டைகர் ஷெரோஃப், , ஹிரித்திக் ரோஷன் என கூறியுள்ளார் ஜான்வி.பின்னர் விஜய் தேவரகொண்டாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கு விஜய் தேவரகொண்டா ஏற்கனவே திருமணமானவர் என கூறியுள்ளார் ஜான்வி கபூர்.

இந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதற்கிடையே விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இடையே காதல் உறவு இருப்பதாக கிசுகிசுக்கப்படுவது குறித்து தான் ஜான்விகபூர் இவ்வாறு கூறியிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.