கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது.அதன் காரணமாக உலகக் கோப்பை 2022 தொடரில் பும்ராவால் பங்கேற்க முடியவில்லை.
இந்நிலையில் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சைபெற்று வரும் பும்ரா, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘நல்ல நேரங்கள் வரவிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், பும்ரா விரைவில் அணிக்கு திரும்புவது உறுதியாகிவிட்டது.

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் இந்தியா விளையாடும். இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால், பும்ராவில் இத்தொடரில் பங்கேற்க இயலாது. இதற்கு அடுத்த தொடரில் பும்ரா நிச்சயம் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.