தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவரது நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜிகிர்தண்டா. இத்திரைப்படம் சத்தமின்றி வெளிவந்தாலும் மிகப்பெரிய வெற்றிடைந்தது.
குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி சிம்ஹ தேசிய விருது பெற்று பெற்றார் . இந்நிலையில் ஜிகிர்தண்டா படத்தின் 2-ஆம் பாகத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி தற்போது 8 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட இந்த புதிய வீடியோ இணையத்தில் செம வைரலாக வருகிறது.
அந்த வீடியோவில் ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை எழுதும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் . 8 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ஜிகர்தண்டா 2 ஆம் பக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லாரன்ஸ் அவர்களை நடிக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
#8yearsofJigarthanda
— karthik subbaraj (@karthiksubbaraj) August 1, 2022
And….. pic.twitter.com/pKL2Qi4oks