டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.இது குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர், நாங்கள் செய்த சாதனையில் இது முக்கியமானதாக நான் கருதுகிறேன். தற்போது டி20 உலக கோப்பையை வென்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. எங்கள் அணி வீரர்களின் நினைத்து சந்தோஷப்படுகிறேன்.
இது நீண்ட பயணமாக அமைந்தது. நாங்கள் பல மாற்றத்தை செய்தோம் அதற்கான பலனை இப்போது அனுபவிக்கிறோம்.இது சிறந்த தொடராக எங்களுக்கு அமைந்தது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பு நாங்கள் பாகிஸ்தானுக்கு சென்றோம். அங்கு எங்கள் அணி வீரர்களுக்கு நல்ல பயிற்சி கிடைத்தது.
ஒரு அணியாக நாங்கள் நல்ல பொழுதை அங்கு செலவிட்டோம். அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியதற்கு பிறகு, நாங்கள் மீண்டு வந்தது எங்களுடைய குணத்தை உங்களுக்கு காட்டி இருக்கும்.அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்ற நிலை இருந்தபோது நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளித்தது.
Captain Jos Buttler with the T20 World Cup trophy. pic.twitter.com/CFI8unbLB5
— Johns. (@CricCrazyJohns) November 13, 2022
எங்களுடைய பயிற்சியாளர் எங்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்தார். எங்கள் அணியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் இருப்பதால் இங்கு எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு கற்றுத் தந்தனர் என்று கூறினார் பட்லர்