ஸ்வாட் ஏர்லிட் 004 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீட்டை தொடர்ந்து புதிதாக நெக்பேண்ட் ரக இயர்போனினை ஸ்வாட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய நெக்பேண்ட் இயர்போன் ‘ஸ்வாட் நெக்கான் 101’ என அழைக்கப்படுகிறது. இந்த நெக்பேண்ட் இயர்போன் டார்க் புளூ மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் வடிவமைத்துள்ளது.

இந்த இயர்போன் ஹெச்டி ஸ்டீரியோ சவுண்ட் வழங்கி இதில் உள்ள மென்மையான சிலிகான் காதுகளில் எவ்வித எரிச்சலையும் ஏற்படுத்தாமல் இருக்கிறது. நீண்ட நேர பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த இயர்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் IPX67 தர வாட்டர் ப்ரூப் வசதி மற்றும் 55 மில்லிசெகண்ட் லேடன்சி வழங்குகிறது. இது கேமிங்கின் போதும் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும்.
ஸ்வாட் நெக்கான் 101 நெக்பேண்ட் இயர்போனை 40 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே போதும் 30 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு மியூசிக், அழைப்புகள் உள்ளிட்டவைகளை போனை பார்க்காமலேயே இயக்க முடியும். தலைசிறந்த டிசைன் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் சௌகரியமான அனுபவத்தை வழங்குகின்றன.

இதன் இயர்போன்கள் காந்தம் மூலம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கிறது. மேலும் இதில் ப்ளூடூத் 5.0 வசதி மற்றும் டூயல் பேரிங் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன்களில் 10mm டிரைவர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.