இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் மிரட்டலான நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கைதி”.இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் நல்ல வசூல் வேட்டை நடத்தியது .
இதை அடுத்து , கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படத்தில் “கைதி” படத்தின் காட்சிகள் இடம்பெற்றது ரசிகர்கள் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து “கைதி -2” படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று மக்கள் மத்தியில் ஆர்வமும் கேள்விகளும் அரண்போல் எழுப்பியது.

இந்நிலையில், கேரளாவில் “விருமன்” படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்தியிடம் கைதி -2 படம் எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி, அடுத்த ஆண்டு “கைதி -2” திரைப்படம் கண்டிப்பாக தொடங்கும் என்றார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் கவனம் செலுத்தி வருவதால், அந்த படத்தை முடித்த பின்னர் “கைதி -2″ படத்தின் பணிகள் நிச்சியம் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.
#Kaithi2 Will Start From Next Year.@Dir_Lokesh After Finished Vijay Sir's Film (#Thalapathy67) It Will Be Started ! 💥
— Dir_Lokesh_Fan (@Dir_Lokesh_FC) August 9, 2022
pic.twitter.com/jVRRZa68ww