ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகின்றார்.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ரஜினி அடுத்ததாக டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.மேலும் இப்படத்தின் பூஜை நாளை துவங்கவுள்ளது.இந்நிலையில் இப்படத்தில் அரவிந்த் சாமி மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன.

மேலும் சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படத்தில் இளம் நாயகியான கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமான கல்யாணி ப்ரியதர்ஷன் சிம்புவின் மாநாடு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.தற்போது ரஜினியின் 170 ஆவது படத்தில் நடிப்பதாக பேசப்பட்டு வருகின்றது.