தமிழ் சினிமாவில் 80 களில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் ராமராஜன். இவர் ’சொர்க்கமே என்றாலும்’, ’எங்க ஊரு பாட்டுக்காரன்’, ’கரகாட்டக்காரன்’ உள்ளிட்ட பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது சாமானியன் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இவ்விழாவில் பேசிய ராதாரவி,ஒருமுறை நடிகர் கமல் விமானநிலையத்தில் இவரை பார்த்துவிட்டு இவரது ஹேர்ஸ்டைல் ஒரிஜினல் தானா, இல்லை விக் வைத்திருக்கிறாரோ என்கிற சந்தேகத்தில் தொட்டு பார்த்தாராம்.

ஆனால் இப்போதும் அதேபோன்ற ஹேர்ஸ்டைலுடன் தான் காட்சியளிக்கிறார். அவருக்கு மனசு சுத்தம்.. அதனால் தான் முடி கொட்டவில்லை என்று நினைக்கிறேன் என்றார் ராதா ரவி.