உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இந்நினையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை படக்குழுவுடன் சேர்ந்து பார்த்துள்ளார் கமல்.படம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து படக்குழுவை வாழ்த்தி பேசினார் கமல்.
மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடிக்க இருந்த கதாபாத்திரம் பற்றியும் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பொன்னியின் செல்வனில் நான் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் தம்பி கார்த்தி நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பல வேடங்களில் நானே நடிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.
போர்க்கள காட்சிகளை படமாக்குவது எத்தனை கடினம் என்பது எமக்குத் தெரியும். கத்தி, கேடயம், கவசம், கிரீடம், குதிரை, புழுதி இதனுடன் நடிப்பு என எல்லாவற்றையும் நன்றாக செய்ய வேண்டும். இவை எல்லாவற்றையும் சீயான் விக்ரம் மிக நன்றாக செய்திருக்கிறார். இந்த படத்தை பார்க்கும் போது நான் தயாரித்தது போன்ற ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.

அதுவும் உண்மை. ஏனென்றால் தமிழ் சினிமா தயாரித்திருக்கிறது. இந்த புத்துணர்ச்சி நீடிக்க வேண்டும். இந்த உணர்வும், கூட்டுறவும் நீடிக்க வேண்டும். நாளை என்னுடைய படத்திற்கும் நீங்கள் இதுபோல் கொண்டாட வேண்டும்.” என்றார் கமல்.