தமிழ் சினிமாவில் இதுவரை தோல்வியே கண்டிராத ஒரு சில இயக்குனர்களில் ஒருவர் தான் வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தில் ஆரம்பமான இவரது திரைப்பயணம் தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றது.
பல விருதுகளை தன் வசப்படுத்தியுள்ள வெற்றிமாறன் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல தரமான படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது விடுதலை எனும் படத்தை இயக்கிக்கொண்டிருக்கின்றார் வெற்றிமாறன். சூரி கதையின் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

மேலும் இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாகவும், முதல் பாகம் இந்தாண்டு இறுதியில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
இதையடுத்து தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து ஒரு பாடலை பாடவுள்ளனராம். ரஜினி மற்றும் கமல் இணைந்து ஒரு பாடலை பாடுவதாகவும், தனுஷ் தனியாக ஒரு பாடலை பாடுவதாகவும் தெரிகின்றது. ரஜினி மற்றும் கமல் ஒன்றாக நடித்ததை பார்த்து ரசித்த ரசிகர்கள் தற்போது அவர்கள் ஒன்றாக பாடுவதை கேட்க ஆவலாக இருக்கின்றனர்
