விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார்.இப்படத்தை அடுத்து மணிரதம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.இது கமலின் 234 ஆவது படமாக உருவாகவுள்ளது. கமல் – மணிரத்னம் இணையும் படத்தின் ஷூட்டிங், பொன்னியின் செல்வன் 2 ரிலீஸுக்குப் பின்னர் தான் தொடங்குகிறது.
இதனிடையே கமல் தனது 233வது படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை கொடுத்துள்ள ஹெச் வினோத், இப்போது துணிவு படத்தை இயக்கியுள்ளார்.

தொடர்ச்சியாக அஜித்தின் 3 படங்களை இயக்கியுள்ள ஹெச் வினோத், முதன்முறையாக கமலுடன் இணையுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கமல் மற்றும் வினோத் இணையும் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது.விரைவில் இதைப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவது குறிப்பிடத்தக்கது