ஹிந்தி மற்றும் அயல்நாடுகளில் பிரபலமான ஷோவாக வலம் வந்தது தான் பிக் பாஸ். அதை தமிழிலும் கொண்டுவந்த கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. அதைத்தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார் கமல்.
ஆனால் இடையில் விக்ரம் படத்தின் பணிகள் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் கமல்.அதன் பின் சிம்பு கமலுக்கு பதிலாக தொகுத்து வழங்கினார்.பிக் பாஸ் 6ம் சீசன் தமிழில் மிக விரைவில் தொடங்க இருக்கிறது.
அதற்கான ப்ரோமோஷன் பணிகள் தொடங்கிவிட்டது.முதலில் ராஜு இருந்த பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகி வைரலானது. அதில் பொதுமக்களும் போட்டியாளராக வர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 6 தொகுப்பாளரான கமல் முதல்முறையாக வரும் ப்ரோமோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
வேட்டைக்கு ரெடியா.. 😎 #BiggBossTamil6 விரைவில்.. @ikamalhaasan @preethiIndia @NipponIndia pic.twitter.com/3pme4NwfSQ
— Vijay Television (@vijaytelevision) September 5, 2022