லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படத்தின் ஹீரோ விஜய் என்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான். இப்படத்தில் சஞ்சய் தத், விஷால், திரிஷா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகிவிட்டது.
ஆனால், இதுவரை இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி தளபதி 67 திரைப்படத்தில் கமல் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற ரோலில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

அதைபோல் தளபதி 67 படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் கமல் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது