நடிகர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். இதில் நடிகை ராதிகா உட்பட சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
இதில் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலுக்கு நடிகை ராதிகாவுடன் சேர்ந்து செம்ம ஆட்டம் போட்டுள்ளார் கமல்ஹாசன்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து மணிரத்னத்தின் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
#Ulaganayagan @ikamalhaasan dancing for his song #PathalaPathala along with Mrs. @realradikaa on his birthday party ❤️👍🎂 happy to see him being happy he deserve all the love ❤️❤️❤️ pic.twitter.com/SsikEGews0
— Sankarganesh_Lovepeace🇮🇳MNM (@SankarganeshLo1) November 9, 2022