புகழ்பெற்ற வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 93. நெல்லை சத்திர புதுகுளத்தில் பிறந்த சுப்பு ஆறுமுகம் காந்தியின் சுயசரிதையை முதல் முதலாக அவர் வில்லுப்பாட்டாக பாடியவர். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் 19 படங்கள் மற்றும் நாகேஷின் 60 படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை எழுதி கொடுத்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டில் சுப்பு ஆறுமுகத்துக்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. அத்துடன் 2021ல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் கலைவாணர் என்.எஸ்.கே கண்டெடுத்த இசைவாணர். வில்லுப்பாட்டு கலையை வளர்ப்பதிலேயே வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். அதில் பல புதுமைகளைப் புகுத்தி வில்லடியை வெகுமக்களுக்கும் கொண்டுசேர்த்தவர். அபாரமான நகைச்சுவை எழுத்தாளரும் கூட. இனிய நண்பரை இழந்து விட்டேன். என் அஞ்சலி. ” என்று குறிப்பிட்டுள்ளார்.
வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் கலைவாணர் என்.எஸ்.கே கண்டெடுத்த இசைவாணர். வில்லுப்பாட்டு கலையை வளர்ப்பதிலேயே வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) October 10, 2022
அதில் பல புதுமைகளைப் புகுத்தி வில்லடியை வெகுமக்களுக்கும் கொண்டுசேர்த்தவர். அபாரமான நகைச்சுவை எழுத்தாளரும் கூட. இனிய நண்பரை இழந்து விட்டேன். என் அஞ்சலி. (2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) October 10, 2022