Skygain News

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை..வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!

லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் உருவானது. கொரோனா லாக்டவுன், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கும் மேலாக நடக்காமல் தேங்கி நின்றது.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படம குறித்த லேட்டஸ்ட் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு ஏற்பட்டு, ‘இந்தியன் 2’ படத்திற்கான பணிகள் மீண்டும் துவங்கியது. தற்போது புதிய அப்டேட்டாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக் அப் போடும் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்துள்ளார். அவர் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் இதுவாகும், இதற்கு முன் ரஜினியின் தர்பார் படத்தில் யோகராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More