Skygain News

உலகநாயகனா இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்..ரசிகர்கள் கருத்து..!

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார். விக்ரம் படத்தை அடுத்து மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணின் இயக்கத்தில் ஒரு படம், விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் என தொடர்ந்து படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கமல்.

இது ஒருபுறமிருக்க ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக பல படங்களை கமல் தயாரித்தும் வருகின்றார். சிவகார்த்திகேயன், உதயநிதி நடிக்கும் படங்களை தொடர்ந்து சிம்புவின் ஒரு படத்தையும் தயாரிக்க இருக்கின்றார் கமல். இந்நிலையில் கடந்த 2018 துவங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 படத்தை கமல் மீண்டும் துவங்கியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் பல பிரச்சனைகளை சந்தித்தது. அதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து உலகநாயகன் கமல்ஹாசனின் முயற்சியினால் இப்படம் மீண்டும் துவங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இப்படம் 3 மணிநேரம் 10 நிமிடம் ஓடக்கூடியதாக இருக்கின்றதாம். இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

ஏனென்றால் படம் எவ்வளவு அருமையாக இருந்தாலும் இரண்டரை மணி நேரம் ஓடும் படத்தையே மிக நீளம் என்று ரசிகர்கள் சொல்லும் காலகட்டத்தில் மூன்று மணிநேரத்திற்கு மேலாக ஓடும் படத்தை கண்டு பயப்படுகின்றனர் ரசிகர்கள். என்னதான் ஷங்கர் இயக்கும் உலகநாயகன் நடிக்கும் படமாக இருந்தாலும் படத்தின் ரன்னிங் டைம் மிகவும் அதிகம் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.