Skygain News

இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்ட கமல்..மீசையை முறுக்கி கெத்தாக இருக்கும் உலகநாயகன்..!

கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடிக்க தயாராகி வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதற்கு முன்பு நான்கு வருடங்களாக கமலின் படங்கள் வெளியாகாததால் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அந்த விமர்சனங்களையெல்லாம் விக்ரமின் வெற்றி தவுடுபொடியாக்கியது. அதைத்தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க துவங்கியுள்ளார் கமல். கடந்த 2019ஆம் தேதி தொடங்கப்பட்ட இப்படம், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா பரவல் காரணமாக பாதியில் நின்றது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. தற்போது படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். இன்று முதல் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் கமல்.

மேலும் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ள நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கருடன் கைகுலுக்கி உரையாடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More