உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இடையில் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்த கமல் விக்ரம் படத்தின் மூலம் பிராம்மாண்டமான கம்பாக்கை கொடுத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இதையடுத்து தற்போது தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார் கமல்.மலையாளத்தில் பிரபல இயக்குனரான மகேஷ் நாராயணனின் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதையடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.இந்நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
ஆனால் பல பிரச்சனைகள் காரணமாக இப்படம் கிடப்பில் போடப்பட்டது.இதைத்தொடர்ந்து ஷங்கர் தெலுங்கு படத்தை இயக்க சென்றார். கமல் அரசியல், டிவி நிகழ்ச்சிகள் என பிஸியானார். எனவே இப்படம் கைவிடப்பட்டதாக அனைவரும் கருதினர். இந்நிலையில் விக்ரம் படத்தின் சக்ஸஸ் மீட்டில் கமல் இந்தியன் 2 மீண்டும் துவங்கும் என உறுதியளித்தார்.
இந்நிலையில் சமீபகாலமாக கமல் விக்ரம் படத்தில் நடித்த கெட்டப்புடன் தான் இருந்தார்.ஆனால் தற்போது முறுக்கு மீசையுடன் செம மாஸாக வலம் வருகின்றார் கமல்.எனவே இந்தியன் 2 படத்திற்காகத்தான் கமல் முறுக்கு மீசை கெட்டப்புடன் இருக்கின்றார் என்ற தகவல் தற்போது வந்துள்ளது
#KamalHaasan𓃵 – New Look for #Indian2 🔥👌
— VCD (@VCDtweets) September 19, 2022
• #Aandavar Reportedly to Speak different languages in a SINGLE TAKE in the film 💥
• Cult Panchathanthiram's Hysteria to repeat again on Big Screens 🔥#KamalHaasan #Shankar #Anirudh pic.twitter.com/g0kKWeqbw5