Skygain News

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் கமலா ? செம ட்விஸ்ட்டால இருக்கு..!

சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் நேற்று வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்த முத்து என்ற இளைஞனாக சிம்பு அப்படியே தத்ரூபமாக நடித்திருக்கிறார்.

என்னதான் கதையில் எந்த புதுமையும் இல்லை என்றாலும் அதை சொல்லியிருக்கும் விதம் ரசிகர்கள் ரசிக்கும்படி இருப்பதாக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிம்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களிடமும் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நாயகன் கமலின் ரெபரென்ஸ் காட்சி இடம்பெற்றுள்ளது ரசிகர்களை திரையில் கொண்டாட வைத்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான நாயகன் படத்தில் ஐயர் என்ற கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடித்திருப்பார். அவர் வெந்து தணிந்தது காடு படத்திலும் அதே கதாபாத்திரத்தில் ஒரு காட்சியில் வருவார்.

அவர் வரும் காட்சியில் அவருக்கு பின்னால் நாயகன் கமலின் புகைப்படம் இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் திரையில் ஆரவாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.