உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் முயற்சியில் தன் ஒவ்வொரு படத்தின் மூலமும் ஈடுபட்டு வருகின்றார். கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு கமலின் படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் இந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வெளியானது.
ரசிகர்களின் காத்திருப்பிற்கு ஏற்றவாறு இப்படம் அமைந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. தமிழகத்தில் வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக அமைந்தது விக்ரம் திரைப்படம்.இதன் காரணமாக இப்படத்தில் நடித்து இப்படத்தை தயாரித்த கமல்ஹாசன் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பின்பு பல்வேறு பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் துவங்கப்பட்டது.கமலின் முயற்சியால் சுமுகமான முடிவு எட்டப்பட்டு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் உலகநாயகன் கமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் இப்படத்திற்காக கமல் வாங்கியுள்ள சம்பளம் பற்றி இணையத்தில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகின்றது.அதாவது இப்படத்திற்காக கமல் 120 கோடிக்கு மேல் சம்பளமாக வாங்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இப்படம் துவங்கும் போது கமலின் சம்பளம் 40 கோடியாக தான் இருந்ததாகவும், தற்போது விக்ரம் படத்தின் வெற்றியினால் கமலின் சம்பளம் பல மடங்கு அதிகரித்ததாகவும் தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.