உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். அவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமலே தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
செம மாஸாக வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டிய படமாக உருவெடுத்தது. இதன் காரணமாக உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் கமல் தொடர்ந்து படங்களில் நடிக்க கமிட்டாகிவருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டம் கோவையில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு பேசிய கமல், விக்ரம் திரைப்படம் நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடவைத்த ரசிகர்களுக்கு நன்றி.

நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள். உங்களின் வாழ்த்தும், பாராட்டும் தான் அவர்களின் சம்பளம் உயர காரணமாக இருக்கும்.நல்ல படங்களையும் தொடர்ந்து ஆதரியுங்கள். பாலிவுட் திரையுலகம் நம்மை பார்த்து பயப்படுகின்றது. தென்னிந்திய சினிமா துறையின் மீது அனைவரது பார்வையும் திரும்பிவிட்டது என்றார் கமல்.