கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கமலின் படங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக வெளியாகாததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். மேலும் அவர் அரசியல் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பிசியானதால் இனி அவர் படங்களில் நடிப்பாரா இல்லையே என்ற கேள்வியும் எழுந்து வந்தது.
இந்நிலையில் இந்த கேள்விக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் கமல் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை ஒரு வெறித்தனமான டீசரின் மூலம் வெளியிட்டார். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமலே இப்படத்தை தயாரித்தார்.
அனிருத்தின் இசையில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் சாதனை செய்தது. இந்நிலையில் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றைய தினம் 100வது நாளை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

இதையொட்டி படக்குழுவினர் போஸ்டர்களை வெளியிட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இந்த 100வது நாள் கொண்டாட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.