தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் கமல்ஹாசன். தனது 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர். கடந்த 63 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் தொடாத துறைகளே இல்லை.
சினிமாவை தாண்டி அரசியலிலும் இறங்கி அங்கேயும் தடம் பதித்துள்ளார் கமல்ஹாசன்.
தொடர்ந்து சினிமாவில் ஆக்டிவ்வாக உள்ள கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன்.இந்நிலையில், கமலஹாசனின் அண்ணனான சாருஹாசன் வீட்டில் கமலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.


இதில், சாருஹாசன், சாருஹாசனின் மனைவி கோமளம், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி,அனு ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த புகைப்படத்தை நடிகை சுஹாசினி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சித்தப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.