பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக செல்கின்றது. ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையிலே பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் அனல் பறக்க துவங்கியது. இதனால் பிக்பாஸ் வீடு தற்போது பரபரப்புகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று வருகிறது.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்த கமல் அனைவரும் வெளுத்து வாங்கியுள்ளார். டாஸ்க்கிற்கு அழைத்தால் தாமதாக வருவது, வேறு மொழியில் பேசுவது, மைக்கை மறைத்துவிட்டு பேசுவது, பேப்பரில் எழுதிவிட்டு பேசுவது உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பொளந்து கட்டியுள்ளார்.
மேலும், இதுவரை எந்த சீசனிலும் ரெட் கார்டு கொடுக்கும் உரிமை எனக்கு இருந்தும் நான் கொடுத்தது இல்லை. ஆனால் இனிமேல் நானே ரெட் கார்டு கொடுத்து அனுப்பிவிடுவேன் என விளாசியுள்ளார் கமல்.
#Sherina evicted with Malayalam card….#BiggBossTamil6 pic.twitter.com/cWUyXwG7UK
— Dr.Ilavarasi (@Ilavarisirk) November 6, 2022
அத்துடன் செரினாவின் பெயரை எலிமினேஷனில் அறிவிக்கும் போது, கார்டில் மலையாளத்தில் பெயர் இடம்பெற்றிருந்தது. கமல் வார்னிங்கை மீறி பிக்பாஸ் வீட்டில் மலையாளத்தில் பேசிய செரினாவிற்கு கமல் சரியான பதிலடி கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.