கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு, அரண்மனையாகவும், அருங்காட்சியகமாகவும் மாறியது. அரண்மனையில் இருப்பது போலவே, பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ராஜா, ராணி, படைத்தளபதி, மந்திரி, என மாறி போட்டி போட்டு கொண்டு தங்களுடைய பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தியது ஒரு புறம் இருந்தாலும் மற்றொரு புறம், பிரச்சனைகளும் பற்றி கொண்டு எரிந்தது.
குறிப்பாக ராஜாவாக இருந்த ராபர்ட் மாஸ்டர், ராணி ரக்ஷிதாவிடம் அத்து மீறி நடந்து கொண்டதால், ஒரு நிலையில் அவர் கடுப்பாகி கோபத்தை வெளிப்படுத்தியதில், வெளியே வந்து அழுது ட்ராமா போட்டது, ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் அசீம் இந்த வாரம் முழுக்க கத்திக் கொண்டே இருந்தார்.
அவரால் டென்ஷனான ஏ.டி.கே. உன்னை போன்று ஒருவனிடம் கதைப்பதை அசிங்கமாக நினைக்கிறேன் என்று கூறினார். மேலும் தன் கோட்டை கழற்றி தூக்கி வீசினார். இந்நிலையில் தான் அந்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.எனக்கு எப்படி விளையாடணும்னே தெரியல சார் என கமலிடம் கூறினார் அசீம்.
அதை கேட்ட கமலோ, என்ன நெனச்சுக்கிட்டிருக்கீங்க நீங்க. நீங்க நெனச்சபடி எல்லாம் இங்கே நடக்கும்னு நினைக்காதீங்க என்று கோபமாக தெரிவித்திருக்கிறார்.
#Day42 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/IBK96l6ABF
— Vijay Television (@vijaytelevision) November 20, 2022