பிக் பாஸ் சீசன் 6 தற்போது களைகட்டியுள்ளது.நாளுக்கு நாள் சண்டைகள் வர இந்நிகழ்ச்சி சுவாரஸ்யமாக செல்கின்றது.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க பேக்கரி டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து உருவாக்கும் ஸ்வீட்டுகள் அனைத்தும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. பொதுவாக பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் வைத்தாலே அது சண்டையில்லாமல் முடியாது.
அந்த வகையில் பேக்கரி டாஸ்கிலும் அதிகளவில் சண்டைகள் இருந்தன. குறிப்பாக கண்ணா லட்டு திண்ண ஆசையா என்கிற அணியின் தலைவராக இருந்த தனலட்சுமி, கடந்த வாரம் நடந்த பெரும்பாலான சண்டைகளுக்கு காரணமாக இருந்தார். அதுமட்டுமின்றி அவர் விதிகளை மீறி விளையாடி தான் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றார்.
இந்த டாஸ்கின் இறுதியில் தனலட்சுமியின் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதோடு, அதில் தலைவராக இருந்த தனலட்சுமி அடுத்த வார நாமினேஷனில் இடம்பெற மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஓவர் குஷியில் இருந்த தனலட்சுமிக்கு தற்போது ஆப்பு வைத்து இருக்கிறார் கமல்ஹாசன்.
#Day35 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/fdS26cexQC
— Vijay Television (@vijaytelevision) November 13, 2022
தனலட்சுமி பேக்கரி டாஸ்க்கில் செய்த விதிமீறல்களை குறும்படமாக போட்டு காட்டிய கமல்ஹாசன், அவர் இந்த போட்டியில் வெற்றிபெற்றது செல்லாது என அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமின்றி அடுத்த வார நாமினேஷன் ஃப்ரீ சோனில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு விக்ரமன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். கமல்ஹாசனின் இந்த டுவிஸ்டை சற்றும் எதிர்பார்க்காத தனலட்சுமி, வாயடைத்துப் போனார்