உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியினால் புது உத்வேகத்துடன் காணப்படுகின்றார் கமல்.
ஷங்கரின் இந்தியன் 2, மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் என செம பிசியாக இயங்கி வருகின்றார் கமல். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் இந்தாண்டும் தொகுத்து வழங்க உள்ளார்

இதற்காக அவர் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 75 கோடி சம்பளமாக வாங்கிய கமல் இந்த சீசனை தொகுத்து வழங்க 100 கோடிக்கு மேல் சம்பளமாக வாங்கவுள்ளார். தற்போது இவர் சம்பளம் பற்றிய தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.