அடுத்தாண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்களை தேர்வு வேலைகள் தற்போதே ஆரம்பமானது.அதற்கான முதல் கட்டமாக ஒவ்வொரு அணியும் சில வீரர்களை விடுவித்துள்ளனர்.இதில் ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சரியமடைந்த விஷயம், ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை விடுவித்தது தான்.
இந்நிலையில் இதுகுறித்து கேன் வில்லியம்சன் பேசியுள்ளார். அதில், எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை, கவலையும் இல்லை. இந்த உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஐபிஎல் சிறந்தது எனக்கூறலாம். ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு அணிக்காக ஆடுவார்கள்.
நிறைய தொடர்கள், நிறைய ஆப்ஷன்கள் உள்ளன. எனவே டி20 கிரிக்கெட்டை அப்படியே விட்டுவிட மாட்டேன்.சிறிது நாட்களுக்கு முன்பாகவே ஐதராபாத் அணி நிர்வாகம் என்னை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார்கள்.

எனவே அவர்களின் அறிவிப்பு எனக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை. அந்த அணியில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, நிறைய நினைவுகளை கொடுத்துள்ளது என கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.