தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுது.
குறிப்பாக மித்ரன் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்தது.இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றார்.
முதல்கட்ட படப்பிடிப்பு தென்காசி மற்றும் நெல்லையில் நடந்தது.அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

பீரியட் டிராமாவான கேப்டன் மில்லர் பெரிம் பொருட்செலவில் எடுக்கப்படுகிறது. தனுஷின் கெரியரிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் கேப்டன் மில்லர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.