டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறி இருக்கும் கருத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கபில்தேவ், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை கணிப்பது மிகவும் கடினம் என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்தியாவின் உலகக்கோப்பை வாய்ப்பை கணிப்பது மிகவும் கடினம். பிரச்சினையே முதலில் இந்தியா அரை இறுதிக்கு செல்வார்களா என்று பார்க்க வேண்டும். அரை இறுதிக்கு சென்ற பிறகுதான் அதிலிருந்து கோப்பையை வெல்வார்களா என்று பார்க்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை இந்தியா அரையிறுதிக்கு செல்லவே 30 சதவீதம் தான் வாய்ப்பு இருக்கிறது என்று அவர் கூறியிருக்கின்றார்.