தமிழ் சினிமாவில் தரமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருபவர் நடிகர் கார்த்தி.பருத்திவீரன் படத்தின் மூலம் நாயகனாகஅறிமுகமான் கார்த்தி தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார்.கடந்த ஆக்ஸ்ட் மாதம் கார்த்தி நடித்த விருமன் படம் ரிலீஸ் ஆனது. முத்தையா இயக்கிய இப்படத்தில் கிராமத்து நாயகனாக கலக்கி இருந்தார் கார்த்தி.
சூர்யா தயாரித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 60 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.இதையடுத்து செப்டம்பர் மாதம் இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசானது. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்தி அசத்தி இருந்தார் கார்த்தி. இப்படமும் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.இதன்பின்னர் கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் கடந்த மாதம் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்து வெற்றியும் கண்டது.
பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதன் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது.இந்நிலையில் இந்நிலையில், கார்த்தி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. ராஜு முருகன் இயக்கும் இப்படத்திற்கு ஜப்பான் என பெயரிடப்பட்டு உள்ளது.
#Karthi25 – @Karthi_Offl’s #Japan pooja happened today. #ஜப்பான்
— Rajasekar (@sekartweets) November 8, 2022
A film by @Dir_Rajumurugan
Good luck @gvprakash @ItsAnuEmmanuel @vijaymilton @prabhu_sr 🙌 pic.twitter.com/vg1MII1ZCu
நடிகர் கார்த்தியின் 25-வது படமான இதில், அவருக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தின் ஹீரோயின் அனு இமானுவேல் நடிக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். புஷ்பா பட வில்லன் சுனில் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.