பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தற்போது இந்திய முழுவதும் அறிந்த நடிகராக மாறிவிட்டார் கார்த்தி. இந்தாண்டு கார்த்தியின் நடிப்பில் விருமான் படம் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் சமீபத்தில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படமும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.
மணிரத்னம் இயக்கிய கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார் கார்த்தி. இதையடுத்து மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி.இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகின்றது.
இந்நிலையில் இப்படத்தை பற்றி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் கார்த்தி. அப்போது அவரிடம் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு உங்கள் சம்பளத்தை உயர்த்துவிடீர்களா என ஒரு நிருபர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த கார்த்தி, எனக்கும் சம்பளத்தை உயர்த்த ஆசை இருக்கு. ஆனால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைத்தால் போதும் என ஆசைப்படுகின்றேன். மேலும் சம்பளத்தை விட என் அண்ணன் சூர்யாவை போல விருதுகள் வாங்கத்தான் எனக்கு ஆசை என கூறினார் கார்த்தி.