தமிழ் சினிமாவில் தரமான படங்களின் மூலம் ரசிகர்களின் தனி இடம் பிடித்துள்ளார் கார்த்தி. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.இந்நிலையில் ‘சர்தார்’ படத்தின் புரோமோஷனில் பிசியாக இருக்கும் கார்த்தி ‘கைதி 2’ படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் ‘தளபதி 67’ படத்திற்கு பிறகு லோகேஷ் ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தியின் ‘சர்தார்’ தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.கைதி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்த பாகம் உருவாகும்படி தான் முடித்திருப்பார் லோகேஷ் கனகராஜ்.

அன்றிலிருந்தே கைதி 2 எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ‘கைதி’ இரண்டாம் பாகத்திற்கான பெரும்பாலான காட்சிகளை முதல் பாகம் எடுக்கும் போதே படமாக்கி விட்டதாகவும், இன்னும் 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது