தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. கடைசியாக வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சூர்யா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ரசிகர்களை மிரட்டியிருப்பார். அதைத்தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும், சிவா இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகிவரும் படங்களில் நடித்து வருகின்றார் சூர்யா.
மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி 25 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது. அவரது ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமின்றி சூர்யாவும் நெகிழ்ச்சியாக ட்விட்டரில் பேசி இருந்தார்.
சூர்யாவின் தம்பி கார்த்தி தான் அவர்கள் சின்ன குழந்தையாக இருந்தபோது எடுத்த போட்டோவை பதிவிட்டு ட்விட்டரில் வாழ்த்தி இருக்கிறார்.”இரவு பகலாக உழைத்து தான் சூர்யா அவரது அனைத்து மைனஸ்களையும் பெரிய ப்ளஸ் ஆக மாற்றினார். அவரது சாதனைகளை அவரே முறியடிக்க வேண்டும் என உழைப்பவர்.
ஒரு மனிதனாக அவரது இதயம் மிகப்பெரியது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் வாழ்க்கையை மாற்றி கொண்டிருக்கிறார்” என கார்த்தி குறிப்பிட்டு இருக்கிறார்.தற்போது கார்த்தி பதிவிட்ட இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.
He worked day & night to make his every minus into his greatest plus. He focused only at outperforming his own achievements. As a person, he made his already generous heart even larger and shaped the lives of thousands of deserving kids. That’s my brother!#25YearsOfCultSuriyaism pic.twitter.com/5GELKdxGS0
— Actor Karthi (@Karthi_Offl) September 6, 2022